வளர்ச்சியின் பாதையில் தேசம் இடம்பிடித்தாலும் புதுத் தொழில்நுட்பங்களால் படித்தவை வேகமாகக் காலாவதி ஆகின்றன.
படித்து முடித்து வெளிவருவதற்குள் படித்தவை தேவையற்றுப் போய்விடு கின்றன. கற்றலின் போதாமையை ஈடுகட்ட, பெரு நிறுவனங்கள் பயிற்சி வளாகத்தைத் தம்முள் நிறுவி, ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளித்துத் தமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றன. பெரு நிறுவனங்களில் சேர முடியாத பட்டதாரிகள், தம் பங்குக்குத் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பெரும் பணம் கட்டி (கல்லூரிப் படிப்புக்குச் செலவழித்த தொகையைவிட அதிகமாக) பயின்று தமது திறமையை வளர்த்துக்கொள்ளும் நிலையே உள்ளது. இந்தக் திறன்குறையை இட்டு நிரப்பும் நோக்கில், நாஸ்காம் (Nascom) மத்திய அரசுடன் இணைந்து ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்' (Future Skills Nasscom) எனும் ஆன்லைன் இணையத் தளத்தை தொடங்கி உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங் களின் கூட்டமைப்பாக நாஸ்காம் இருப்பதால், அதன் முக்கிய நோக்கம் அதன் உறுப்பினர் களான மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு உதவுவதே. அதன் இணையதளமும் அவ்வாறுதான் வடி வமைக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கியக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் இந்த இணையத் தளத்தில் தம்மை இணைத்துள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது இன்றைய தொழில் அறிவு தேவைகளையும் நாளைய தேவைகளையும் அதில் தெரிவிக் கின்றன. அந்தத் தேவைகளுக்கு ஏற்ற கல்வியை அதில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் வடிவமைத்து வழங்குகின்றன. அந்தக் கல்வியை மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக, நாஸ்காம் edusoft எனும் இணையக் கல்வி வகுப்பைப் பயன்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ், இணையப் பாதுகாப்பு, டேட்டா அனாலிடிக்ஸ், சமூகத் தொடர்பு, கிளவுட் கம்ப்யுட்டிங், உற்பத்திச் சங்கிலி போன்ற துறை களுக்கு வருங்காலத்தில் மிகுந்த மனிதவளம் தேவைப்படும்.
இந்தத் துறைகளுக்குத் தேவையான கல்வியறிவுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இதன் இணையதளத்தில் உள்ளன. தற்போது இந்த இணைய வகுப்புகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி யாற்றும் பொறியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. விரைவில் இவை மாணவர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது
No comments:
Post a Comment