நாட்டில் மொத்தமுள்ள 13.6 லட்சம் அங்கன்வாடிமையங்களில் 4.5 லட்சம் மையங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு மார்ச் 9 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.
தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள 17 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள். இவற்றில் 25 குழந்தைகளுக்குக் குறைவான பதிவுகொண்டிருக்கும் 8000 சத்துணவு மையங்களைத் தமிழக அரசு மூடப்போவதாக அண்மையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அவ்வாறான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படமாட்டாது என்றும் 2,000 அங்கன்வாடி மையங்களை ஆங்கில வழி மழலை யர் பள்ளிகளாக மேம்படுத்தவிருப்ப தாகவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment