சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்
குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிகழ்வை அமெரிக்க பூர்வகுடி மக்கள் வுல்ஃப் மூன் என அழைத்து வருகின்றனர். சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்குக் கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ப்ளட் மூன் என ஆய்வாளர்கள் கூறுகிறார்.
Sponsored
இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தான் சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஆகும். அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.
Sponsored
ப்ளட் மூன்
இந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்றரை மணி நேரம் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வான் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment