எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு? பட்டியல் தயாரிக்க கல்வித்துறை உத்தரவு

Wednesday, January 16, 2019




உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும், 2013ம் ஆண்டின் படி, பணி வரன் முறை செய்யப்பட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை, 2019 ஜன., 1ம் தேதி நிலவரப்படி, இனம் கண்டு பரிந்துரைக்க வேண்டும்.உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் தகுதியானவர். மேற்கண்டவர்கள் பெயர்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்ய வேண்டும்.ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது. முதன்மை கல்வி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, விபரமளிக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 164 உயர்நிலை, மேல்நிைலப்பள்ளிகள் உள்ளது. இதிலிருந்து, பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் விவரம் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுமென, சி.இ.ஓ., அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One