வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய முறையில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் செவ்வாய் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் வரும் 25-ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பி விட வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது
No comments:
Post a Comment