எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூண்டோடு கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Saturday, January 26, 2019


 தமிழகம் முழுவதும் 4வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பணிக்கு வராத அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் 17பி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், பள்ளிகள் எந்த தடையும் இல்லாமல் இயங்குவதற்காக, மாதம் ₹7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். பின்னர் அவர்களுக்கான சம்பளம் ₹10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

அதன்பேரில், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினர். இதையடுத்து, பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 17பி நோட்டீஸ் வழங்கப்பட்டது. பலருக்கு வீட்டுக் கதவுகளில் ஒட்டப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.



சென்னையில், எழிலகம்  முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி அளவில் அவர்கள் எழிலகம் வந்தபோது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். அத்துடன் அமமுக சார்பில் வி.பி.கலைராஜன், வெற்றிவேல் உள்பட நான்கு மாவட்ட செயலாளர்கள் எழிலகத்துக்கு நேரில் வந்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு அமமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.

சென்னை எழிலகத்தில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அளித்த பேட்டி: நான்கு  நாட்களாக போராட்டம் நடக்கின்ற நிலையில் ‘‘மாணவர்கள் நலன் கருதி நீங்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்’’ என்று நீதிமன்றம் கூறுகிறது. ஒருபோதும் ஜாக்டோ-ஜியோ மாணவர்களுக்கு எதிராக செயல்படாது. தேர்வுக்கான பாடங்களை நடத்திவிட்டு தான் எங்கள் உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் போது, அரசு ரூ.7500 சம்பளத்தில் கொத்தடிமைகளாக அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. எங்களை அழைத்துப் பேசுவதற்கு மாறாக அச்சுறுத்தும் வகையில் பணிக்கு செல்லுங்கள் என்று சொல்லி வீட்டில் வந்து 17பி நோட்டீசை ஒட்டுகிறது அரசு. இதுபோன்ற அச்சுறுத்தல்களை நாங்கள் பார்த்துவிட்டோம். முதல்வரை சந்தித்து பேசும் வரை எந்த சக்தியாலும், அடக்குமுறையாலும் எங்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றார்.

இதையடுத்து, மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ணன் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை  மாலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால், ஜாக்ேடா- ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களான அன்பரசு, தாமோதரன், வெங்கடேசன் உள்ளிட்ட 54 பேரை போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே கொண்டு சென்று காத்திருந்தனர். பின்னர் இரவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



அதேபோல, மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்களையும் போலீசார் கைது செய்தனர். சிலரை போலீசார் விடுவித்த பிறகு, நிர்வாகிகள் வீடுகளுக்குச் சென்று விட்டனர். அவ்வாறு சென்ற நிர்வாகிகளையும் போலீசார் வீடு தேடிச் சென்று கைது செய்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் உள்ள தலைவர்கள், பொறுப்பாளர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபர்களின் பெயர் பட்டியல் தயார் செய்தனர். அவர்களை நிற்க வைத்து போட்டோவும் எடுத்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். நிர்வாகிகளை போலீசார் விடுவிக்க மறுத்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் 6 பேர் ஜாமீனில் விடுதலை: திருச்சியில் கைது ெசய்யப்பட்ட  6 ேபரை மாஜிஸ்திரேட் முன் போலீசார் ேநற்று இரவு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் ைவக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் 6 பேரையும் ெசாந்த ஜாமீனில் விடுதலை ெசய்தார்.




தற்காலிக ஆசிரியர் ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.7500 என்பதை ரூ.10 ஆயிரம் என்று உயர்த்தி பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.



குடியரசு விழாவில் பங்கேற்க உத்தரவு
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேற்று அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், இன்று நடக்கும் (26ம் தேதி) குடியரசு தினவிழாவை புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது 17 (பி) நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது பணி இடத்துக்கு வேறு தகுதியுள்ள ஒருவர் நியமிக்கப்படுவார்கள். பணியில் சேர்வோருக்கு ‘நோ ஒர்க், நோ பே’ மட்டுமே கடைபிடிக்கப்படும். 17(பி) வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுக்க மறியல்
கைதான நிர்வாகிகளை விடுவிக்க கோரி சென்னை உட்பட தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில்  இரவு முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.



5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்  மீது 143, 290, 341, 353 மற்றும் சென்னை மாநகர போலீஸ் சட்டப்பிரிவு 41 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டம்  143(சட்டவிரோதமாக கூடுதல்), 290(அரசு ஊழியர்கள் செல்வதை கேட்காமல்  இருத்தல், 341(அரசு ஊழியரை தடுத்தல்), 353(அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல்  தடுத்தல், 7(1)(ஏ)சிஎல்(பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு  ஏற்படுத்துதல், சாலை மறியல் செய்தல்) மற்றும் சென்னை மாநகர சட்டப்பிரிவு  41(5 பேருக்கு மேல் கூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One