உணவு பாதுகாப்பு குறித்த போட்டியில், வெற்றி பெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி பரிசுகள் வழங்க உள்ளார்.
மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வு போட்டிகள், சென்னையில் நடக்க உள்ளன.சுவரொட்டி வரைதல், சுவர் சித்திரம் வரைதல், டிஜிட்டல் படைப்பாற்றல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன.பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் Fssai.gov.in/creativitychallengeல், ஜன.,3ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும்.மாவட்ட அளவிலான போட்டியில், வெற்றிபெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, ஜன.,27ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பரிசுகள் வழங்க உள்ளார்
No comments:
Post a Comment