எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விண்டோஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.. வாடிக்கையாளர்களைக் கைவிடும் மைக்ரோசாப்ட்..!

Thursday, January 17, 2019



உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு இனி சேவை அளிக்க முடியாது என அறிவித்துள்ளது.

ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்குச் சப்போர்ட் சேவையை 14 ஜனவரி 2020ஆம் ஆண்டு முதல் அளிக்க முடியாது என அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7க்கான அடிப்படை சேவையை நிறுத்திவிட்ட மைக்ரோசாப்ட் 2020 முதல் சேவையை முழுமையாக நிறுத்த உள்ளது.

இந்நிலையில் விண்டோஸ் 7 தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மைக்ரோசாப்ட் அப்கிரேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் லைசென்ஸ் கொண்டுள்ளவர்கள் அனைவரும் எளிதாக விண்டோஸ் 10 தளத்திற்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் தனது சேவையை நிறுத்திவிட்டால் விண்டோஸ் பயன்படுத்தும் எல்லோருக்கும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் மட்டும் அல்லமல்ல பல லட்ச நிறுவனங்களும் தங்களது இயங்கு தளத்தைப் புதுப்பித்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் விண்டோஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் உலகில் 39.22 சதவீதம் பேர் விண்டோஸ் 7, 4.41 சதவீதம் பேர் விண்டோஸ் 8.1, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் இதர பழைய ஓஎஸ்களைப் பயன்படுத்துவோர் அளவு 4.45 சதவீதமாக உள்ளது.

இதன் மூலம் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பிற அனைத்து இயங்கு தளத்தைப் பயன்பாட்டாளர்களை விடவும் அதிகரித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One