உண்மையான சிக்கல் தான் என்ன ?
CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.
17 வருடத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை ...
கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் நீக்கம்...
LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேஸ்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது - வேலை பளுவை தருமே தவிர _ கல்வி சூழலை மீட்க போவதில்லை.
ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு - ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் .
தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன.
5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு - 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .
தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் அரசு ஊக்குவிப்பு கல்வி வழங்கும் - எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.
இந்த கோரிக்கைகள் மீடியா கூட மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது - ஜனநாயக மறுப்பு அரசியல் .
கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.
அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.
இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.
அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் - பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்
No comments:
Post a Comment