அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடை நீக்கம் செய்வது, கைது செய்வது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அவர்களை அழைத்துப் பேசி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment