அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதால் மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.
ஆசிரியர்களின் போராட்டத்தால் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மாணவர்களும், சில இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே போல அரசு ஊழியர்களின் போராட்டத்தால் பொது மக்களுக்கான அன்றாடப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டது ஏற்புடையதல்ல. இதற்கு பதிலாக அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment