எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு

Wednesday, January 23, 2019




ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று  முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று  இயங்கவில்லை.

இந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ மாணவியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


அதுமட்டுமின்றி போராட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாததால் அவர்களை வைத்து அரசு பள்ளிகளில் வகுப்பு எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதக அதன் பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One