அடிப்படை சாலை விதிகளைப் பின்பற்ற 7,870
பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மன்றம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப் பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவேஇளம் சிறார்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
அந்த சிறார்கள் சாலை பாதுகாப்பை தாங்கள் மட்டும் பின்பற்றாமல், தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள்மற்றும் சுற்றத்தாரிடம் காலப்போக்கில் கொண்டு செல்வார்கள். எனவே, பள்ளிகளில் சாலை பாதுகாப்புமன்றம் உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 7, 870 அரசுப் பள்ளிகள், அரசு சார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்க தமிழகஅரசு கடந்த டிச.31-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை பள்ளியில் பயிலும் இளம் சிறார்களிடையே ஏற்படுத்த, அவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அடிப்படை சாலை விதிகளைப் பின்பற்ற பயிற்சிஅளிக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment