தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக, கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.
விலையில்லா பொருள்கள்: புத்தகப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள், கழிப்பறைகள், பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment