எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்னும் 49 நாட்களே அவகாசம்: 'டெட்' தேர்ச்சியடையாதோர் கவலை இறுதி கால அவகாசத்தை நீட்டித்து வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

Monday, February 11, 2019




டெட் தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, இனியும் 49 நாட்களே அவகாசம் உள்ளதால், பணி வாய்ப்பு கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010ல் அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, 2011ல் மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இவ்விரு அரசாணைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், நலத்துறை பள்ளிகளில் பணி புரிவோருக்கு, டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் நீடிக்கிறது.

அதோடு, தனியார் பள்ளிகளில் பணிபுரிவோரும், மார்ச், 31ம் தேதிக்குள், டெட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென, கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது.

இதற்கு இனியும், 49 நாட்களே அவகாசம் உள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது நடத்த வேண்டிய டெட் தேர்வுக்கு, கடந்தாண்டு அறிவிப்பு இல்லை.

 இதனால் தகுதித்தேர்வில் தோல்வியடைந்தோர், பீதியில் உள்ளனர்.

அவகாசத்தை நீட்டிக்கணும்தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'2017ம் ஆண்டுக்குப் பின், டெட் தேர்வு அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கும், தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. டெட் தேர்வு அறிவிப்பே வெளியிடாததால், இறுதி கால அவகாசம் நீட்டித்து வழங்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் பணிபுரிவோருக்கான ஊதிய விகிதம் நிர்ணயித்து, அதை பின்பற்ற பள்ளிகளுக்கு, உத்தரவிட வேண்டும்' என்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One