எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேளதாளம் முழங்க கல்விச் சீர் கொண்டு வந்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்..

Saturday, February 16, 2019




விராலிமலை,பிப்.16:  கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மேளதாளம் முழங்க ,நடனமாடி கல்விச் சீர் கொண்டு வந்து அசத்தி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது..

கல்விச்சீர் விழாவிற்கு பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவர் காளமேக கவுண்டர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் கிராமக் கல்விக் குழுவினர் இணைந்து பள்ளிக்கும்,மாணவர்களுக்கும் தேவையான மின்விசிறி,பீரோ,மேசை,நாற்காலி,சாக்பீஸ்,பேப்பர் ,கம்யூட்டர் டேபிள்,விளையாட்டு பொருட்கள் ,குப்பைத் தொட்டி,குடம்,தட்டு,டம்ளர்  ஆகிய பொருள்களை ஊர்வலமாக கொண்டு வந்து கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கினார்கள்...கல்விச் சீராக வந்த அனைத்துப் பொருள்களையும் பள்ளித்தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.
 
விழாவில் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் பேசியதாவது:நாங்கள் படிக்கும் பொழுது இப்ப இந்த பள்ளியில் இருக்கும் வசதிகள் எங்களுக்கு கிடையாது..நாங்கள் படித்து முடித்த பிறகு இந்த பள்ளிக்கு வர வேண்டும் என ஆசை இருந்தது..அந்த ஆசையானது இந்த கல்விச்சீர் திருவிழாவின் மூலம் நிறைவேறியுள்ளது..இந்த விழா ஒரு குறுகிய காலத்தில் சொல்லி நடத்துவதால் எங்களால் முடிந்த அளவு பள்ளிக்குத் தேவையான பொருட்களை வழங்கியுள்ளோம்..இனி வரும் காலங்களில் இப்பள்ளியில் பயின்ற  முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து இதைவிட சிறப்பாக கல்விச் சீர் வழங்குவோம் என்றனர்..மேலும்  மாணவர்களாகிய நீங்களும் கனவுகளோடு படிக்க வேண்டும்..இப்பொழுதிலிருந்தே உங்களது பெயருக்கு பின்னே நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதனை எழுத வேண்டும்..மேலும் மாணவர்கள்  கனவுகள் நனவாக கடுமையாக போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்..

விழாவில் விராலிமலைவட்டார வளமைய மேற்பார்வையாளர் புவனேஸ்வரி ,வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் அ.நார்பெரத் பீலீஸ் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் ..

விழாவில்  கல்விச்சீர் கொண்டு வந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வெடிவெடித்து மேளதாளம் முழங்க நடனமாடியபடியே தங்கள் பயின்ற பள்ளிக்கு கல்விச் சீர்கொண்டு வந்தனர்.அவர்களை தற்பொழுது பயிலும் மாணவர்கள் தேவராட்டம் ஆடி வரவேற்றது குறிப்பிடத்தக்கது..
 
பின்னர் பள்ளி மாணவ,மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.முடிவில் தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவித் தலைமையாசிரியர்  ராஜகோபால் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தார்கள்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One