அன்னவாசல்,பிப்.16 : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குளவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான புத்தகம், மேஜை, பீரோ, மின்விசிறி, மரக்கன்றுகள், சிந்தனை புத்தகங்கள், தட்டு, டம்ளர், முதலுதவி பெட்டி, ஸ்பீக்கர் மைக், எழுது பொருட்கள், கணித பெட்டி, குப்பைத்தொட்டி மற்றும் கல்வி உபகரணங்கள், விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் மரசெடிகள், உள்ளிட்ட அனைத்தும் பொருட்களையும் குளவாய்ப்பட்டி பொதுமக்கள் உள்ளூரில் உள்ள திடலில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக பள்ளிக்கு வந்தடைந்தனர்.பள்ளிக்கு வந்தடைந்த பின் அப்பொருட்களை பள்ளிவளாகத்தில் வைத்து கும்மிஅடித்தனர்..
இதைதொடர்ந்து பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிம்சன் பாஸ்டீன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் சண்முகநாதன் வரவேற்றார்.
இதில் அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள்அரு. பொன்னழகு,
பெ.துரையரசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் மற்றும் பெற்றோர்கள் சார்பில் செல்வம், அடைக்கலம், சொக்கன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், கல்பனா, பாண்டியம்மாள், சரவணக்குமார், விஜயக்குமார், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment