🌀🌀எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை, வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகமாகி உள்ளது
🌀🌀வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
🌀🌀இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்
🌀🌀வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது
🌀🌀இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது
🌀🌀பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது
🌀🌀இந்நிலையில் எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை வாட்ஸ் அப் சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது
🌀🌀வாட்ஸ் அப்பின் சோதனை ஓட்ட பதிவு எனப்படும் பீட்டா வெர்சனில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
🌀🌀பார்வேர்ட் செய்யும் குறுஞ்செய்தியை கிளிக் செய்து 'i' என்ற பொத்தானை அழுத்தினால் எத்தனை முறை அந்த குறுஞ்செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் காட்டப்படுகிறது
🌀🌀நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளாக இருந்தால் , "அடிக்கடி பார்வேர்ட் செய்யப்படுகிறது" (Frequently Forwarded) என்ற தகவலும் இணைத்து காட்டப்படுகிறது
🌀🌀தவறான மற்றும் போலி செய்திகளை குறைக்க இந்த புதிய வசதியை அமல்படுத்தி உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment