எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பி.இ. கலந்தாய்வு: 1.16 லட்சம் பேர் பதிவு

Saturday, May 25, 2019




பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து  200 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
2019-20 கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 21 இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22 இல் விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூலை 3 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One