எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஏழைக் குழந்தைகளுக்கு இணையதளம் வழியாக மே 29, 30-ல் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை

Sunday, May 26, 2019




தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன.இதற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 18-ல் முடிந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே இலவச மாணவர் சேர்க்கையில் பல தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்எழுந்தன. மேலும், மாணவர்களை சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் மேற்பார்வையில்...

இத்தகைய புகார்களை தவிர்க்க தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாண வர் சேர்க்கையை இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக அரசே ஏற்று நடத்த முடிவானது. அதன்படி, நடப்பு ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள்சரிபார்க்கும் பணி மே 28-ம் தேதியுடன் முடிந்துவிடும்.

பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக விண் ணப்பங்கள் வந்திருந்தால் அனை வருக்கும் சேர்க்கை வழங்கப்படும். கூடுதலாகவிண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One