மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவை விட ஒரு லட்சத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்தமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38-ல் 37 தொகுதிகளைதிமுக கூட்டணியும், ஒரு தொகுதியை அதிமுகவும் கைப்பற்றின. 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.தேர்தல் பணிகளை பொறுத்தவரை, அந்தந்த மாநில அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்தியஅரசு ஊழியர்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இவ்வாறாக தேர்தல் பணியாற்றுவோர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணி சான்றிதழ் (இடிசி) என இருவகையான வாக்கு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் தபால் வாக்குகள், தாங்கள் சார்ந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கானதாகும். இடிசி என்பது, தாங்கள் சார்ந்த தொகுதியிலேயே பணியாற்றும் நிலையில், இந்த சான்றைப் பெற்று, தாங்கள் பணிக்காக செல்லும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிப்பதாகும்.அந்த வகையில், தமிழகத்தில் நடந்த தேர்தலுக்கான பணிகளில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக 4 கட்டங் களாக பயிற்சிகள்வழங்கப்பட்ட நிலையில், 2-ம் கட்ட பயிற்சியின்போதே, தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குகளை செலுத்துவதற்காக படிவம் 12 (தபால் வாக்கு) மற்றும் படிவம் 12 ஏ(இடிசி) வழங்கப்பட்டன.அந்த முகாமிலேயே தபால் வாக்குகளை செலுத்தவும் வசதி செய்யப்பட்டது.
இது தவிர, வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி காலை 7 மணிவரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டது.அந்த வகையில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே தங்களது தபால் வாக்கு மற்றும் இடிசி படிவங்களை சமர்ப்பித்தனர். அதில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தொகுதி, பாகம்எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை சரியாக குறிப்பிடாத மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பட்டியலுடன் பொருந்தாத 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகதேர்தல் ஆணை யம் தெரிவித்தது.
தமிழகத்தில் பெறப்பட்டதபால் வாக்குகளில் மக்களவை தொகுதிகளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 379 தபால் வாக்குகள்திமுகவுக்கு சென்றுள்ளன. அதிமுக வுக்கு 39 ஆயிரத்து 458 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதிகபட்சமாக பாரிவேந்தருக்கு (பெரம்பலூர்) 6 ஆயி ரத்து 692 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், அதிமுகவில் தருமபுரி வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு 3 ஆயிரத்து 222 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.சட்டப்பேரவை தொகுதிகளைப் பொறுத்தவரை 22 தொகுதிகளில் திமுகவுக்கு 15 ஆயிரத்து 447 வாக்குகளும், அதிமுகவுக்கு 4 ஆயிரத்து 484வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதிகபட்சமாக பெரியகுளம் தொகுதி திமுகவேட்பாளருக்கு 1,592 வாக்குகள் கிடைத்துள்ளன.தஞ்சை தொகுதியில் அதிமுகவேட்பாளரைவிட அமமுக வேட்பாளர் ரெங்கசாமிக்கு 9 தபால்வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன.இதன் மூலம் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவை விட திமுக 1 லட்சத்து 8 ஆயிரத்து 884 வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கும் கணிசமான தபால் வாக்குகள் சென்றுள்ளன.
தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி( அத்வாலே) வேட்பாளர் நடிகர்பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு 5 தபால் வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய தேர்தல்களில் தபால் வாக்குகள் அடிப்படையில், திமுகவுக்கேஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆதரவு இருக்கும். அதேநிலை தற்போதைய தேர்தலிலும் தொடர்வதை பார்க்க முடிகிறது.
No comments:
Post a Comment