பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் புதன்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதன்கிழமை (மே 29) முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்துக்குச் சென்று hall ticket என்ற வாசகத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில், குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment