எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

40.66 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகப் பைகள்

Thursday, May 23, 2019


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவியருக்கு புத்தக பைகளை விநியோகம் செய்யும் உரிமத்தை, தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம், மாவட்டம் தோறும் விநியோகம் செய்யும் வகையில், இரண்டு பேருக்கு  தயாரிப்புப் பணியை வழங்கியுள்ளது.
சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி உட்பட, 100-க்கும் மேற்பட்ட இடங்களில், புத்தகப் பைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில், பைகள் வழங்கப்பட்டன.
நிகழாண்டு  ஊதா நிறத்தில் வழங்கப்படும் பைகளில் ஜெயலலிதா மற்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்களுடன் அரசு முத்திரையும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன. பள்ளி திறக்க  10 நாள்களே உள்ள நிலையில், சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு புத்தக பைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதில் 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதால் வரும் 26-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக, தயாரிப்பாளர்கள் கூறினர். பள்ளி திறக்கப்படும்  ஜூன்  3-ஆம் தேதி மாணவ,  மாணவிகளுக்கு புத்தகப் பைகள் கிடைத்துவிடும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One