திருக்குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
இன்றைய பழமொழி மற்றும் விளக்கம்
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்
நாம் அறிந்த விளக்கம் :
மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது இதன் உண்மை விளக்கம் அல்ல.
விளக்கம் :
ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
இன்றைய சிந்தனை
விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி
Important Daily Used Words - Profession & Accupation
Weaver -நெசவாளி
Witch, Wizard - சூனியக்காரி
Wrestler மல்யுத்த வீரர், பயில்வான்
Writer, Scribe எழுத்தாளர், எழுத்தர்
Actress நடிகை
இன்றைய மூலிகை
தூதுவளை
சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளிநீக்கும், உடல் பலம் தரும்.
கீழாநெல்லி
மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.
இன்றைய நீதிக் கதை
எலியின் பசி
ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம்... அது ரொம்பநாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு... கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம். ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்டு எலி குண்டாயிடுச்சு. எலி வெளியே வர பார்த்துச்சு.......அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு பாவம்.
நீதி :
பேராசை இருத்தல் கூடாது.
🧾🧾🧾🧾🧾🧾🧾
செய்திச் சுருக்கம்
🆕நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி.
🆕தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
🆕நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு தலைவர்கள் இரங்கல்.
🆕வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி.
🆕 பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
🆕உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
தொகுப்பு
T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.
No comments:
Post a Comment