எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

Thursday, June 6, 2019




அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்காக ஜூன் 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.
அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதைப் பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த மே 16-ஆம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுதவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், ""தேசிய நல்லாசிரியர் விருது -2018 பெற தகுதியான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ம்ட்ழ்க்.ஞ்ர்ஸ்.ண்ய் இணையதளத்தில் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பணியாற்றியிருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களும், கல்விஅலுவலகங்களில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கக் கூடாது.
மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள்
ஜூன் 15-ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One