தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய செங்கோட்டையன், தேர்தல் காரணமாக சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் இலவச சீருடைகள் அனுப்பி வைக்கப்படும்.
விரைவில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? இல்லையா? என்பதை ஸ்மார்ட்கார்டு மூலம் பதிவு செய்து, வருகைப் பதிவு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment