எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

PG TRB Notification Published Full Detail I PG TRB மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ற்கான காலி பணியிடம் மற்றும் முழு தகவல்கள்

Thursday, June 13, 2019


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் online வாயிலாகவே வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 24 ஜூன் முதல் துவங்குகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் ஜூலை 15 மாலை 5 மணி. மொத்தம் 2144 ஆசிரியர் பணியிட இடங்கள். முதுகலை அறிவியல் அல்லது முதுகலை கலைப்பிரிவில் 50 % உடன் B.Ed படத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்கல்வி இயக்குனர் நிலை I பணிக்கு 50% or B.P.E degree / B.P.Ed (Integrated) 4 years or B.P.Ed with at least 55% or B.P.E Course (or its equivalent) of 3 years duration or  M.P.Ed of at least 2 years விண்ணப்பிக்கலாம்.

இதில் முதல் முறையாக நான்கு சதவீத மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீடு கோர்ட்டு உத்தரவுபடி  மொத்தம் 134 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் 500 ரூபாய் பொதுப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர்களுக்கு 250 ரூபாய் என தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். கட்டணங்கள்  ஆன்லைன்  வழியாகவே இன்டர்நெட் பாங்கிங் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றின் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.


ஆஃப்லைனில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாக தேர்வு கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பாடத்திலிருந்து 110 கேள்விகளும், education methodology 30 கேள்விகளும். பொது அறிவு 10 கேள்விகளும் வரும் என தெரிவித்துள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுகள் கணினி வழியாகவே நடைபெறும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One