தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மூன்று உயரதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் 3 பேருக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷாராணி, அரசுத் தேர்வுகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகச் செயலாளர் பழனிச்சாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் லதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்துக்கு விரைவில் புதிய இயக்குநர் அல்லது ஏதேனும் ஒரு இயக்குநருக்கு கூடுதல் பணியாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது
No comments:
Post a Comment