எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் பொறுப்பேற்பு

Monday, July 1, 2019


தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 முன்னதாக அவர், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிதித் துறை செயலாளராக இருந்த க.சண்முகம், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
 அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One