பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது.
இரண்டாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் வட்டி விகிதத்தின் அளவு 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment