வரும், 30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டும், ஏப்ரலில் மாணவர் சேர்க்கை துவங்கும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசு பள்ளி களில் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றனர். இது போன்ற பல காரணங்களால், ஆகஸ்ட் வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும்.
ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், மேலும், ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு, செப்டம்பர் வரை மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த காலக்கெடு, வரும், 30ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின், காலாண்டு விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு பாடங்கள், மாணவர்களுக்கு நடத்தப்படும். எனவே, 30ம் தேதியுடன் புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்திக் கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment