தமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டுப்பாடுகள் முழுதும் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good.proceed..it.
ReplyDelete