எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குரூப் 4 தேர்வுக்கு சில டிப்ஸ்

Sunday, September 1, 2019




குரூப் 4 தேர்வுக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டு இருப்பீர்கள் .. சில டிப்ஸ் ( தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் )

# முதலில் answer sheet ல் பதிவெண் , கேள்வித்தாள் வரிசை இதர விபரங்களை கவனமாகப் பதிவு செய்யவும் .

# முதலில் தமிழ் வினாக்களுக்கு விடையளிக்கலாம்.

# கேள்வித்தாளில் விடைகளைக் குறித்து வைத்து விட்டு மொத்தமாக விடைத்தாளில் ஷேட் செய்தல் கூடாது.

# முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடைகளை அப்போதே விடைத்தாளில் கவனமாக உடனே ஷேட் செய்து விடவும் .

# விடை தெரியாத கேள்விகளுக்கு சந்தேகப்படும் விடைகளைப் புள்ளி வைத்து அடுத்த கேள்விகளை பார்க்கத் துவங்கலாம் . அடுத்தடுத்த கேள்விகளில் சில நேரங்களில் நமக்குத் தேவையான விடைகள் கிடைக்கக் கூடும்.

# எப்போதும் கேள்வியை நன்கு கவனமாகப் படிக்க வேண்டும் . எது சரியல்ல என்பதற்கு பதிலாக சரியானது என்று நினைத்தும் , எது சரி என்பதற்கு பதிலாக சரியல்ல என்று நினைத்து பதிலளித்து விடக் கூடும்.

# அதேபோன்று நான்கு விடைகளையும் வாசித்து எது மிகச்சரியானது எது என்று முடிவு செய்து விடையளிக்க வேண்டும் . இதுதான் சரி என்று வேகம் வேகமாக விடையளித்துவிட்டு சரியான விடை அடுத்த option ல் இருப்பதை வீட்டில் வந்து பார்த்துவிட்டு வருந்துவர். இதனைத் தவிர்க்கவும்.

# விடை தெரியாத கேள்விக்கு , நான்கு  விடைகளில் இரண்டு தொடர்பில்லாதவையாக இருக்கும் அவற்றை நீக்கிவிட்டு மீதமிருக்கும் இரண்டு விடைகளில் மிகச்சரியானதை யோசித்து விடையளிக்க முயற்சிக்க வேண்டும் . ( பிங்கி பிங்கி பாங்கி போடக் கூடாது )

# பொதுவாக விடைகளில் அடைப்புக் குறிக்குள் ஆங்கில விளக்கம் குறிக்கப்பட்டிருந்தால் அதனை சரியான விடையாகக் கருத வாய்ப்பு உண்டு . கேள்வியை மீண்டும் படித்துவிட்டு இவ்விடைகளைத் தேர்வு செய்யலாம் . முற்றிலும் விடை தெரியாத கேள்விகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம்.

# கணக்குப் பகுதியில் பொதுவாக 1 அல்லது 0 போன்றவை இருந்தால் அவை விடைகளாக இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் முடிந்த அளவு கணக்கு ஒர்க் அவுட் செய்து பார்க்கவும் .

# விடைகளில் அனைத்தும் சரி என்ற விடைகள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும் .

# தமிழ் கேள்விகளுக்கு அடுத்து கணக்குப் பகுதியை 30 - 40 நிமிடங்களில் விடையளித்து விட்டுப் பின்னர் பொது அறிவு கேள்விகளுக்குச் செல்ல வேண்டும். கடைசி நேரத்தில் கணக்குப் போட்டு பார்த்தல் நல்லதல்ல . நேரமின்மையால் படபடப்பு ஏற்பட்டு தெரிந்த கேள்விகளுக்கும் தவறான விடையளிக்க நேரலாம்.

# தேர்வு அறையில் அறையின் கண்காணிப்பாளரின் அறிவுரைப்படி செயல்படுவதும் , வீண்விவாதங்களைத் தவிர்ப்பதும் நலம் . தேர்வு அறையில் முழு கவனத்தையும் தேர்வு எழுதுவதில் செலுத்த வேண்டும் .

# விடைத்தாளில் தவறான விடைகளைத் திருத்த முயல வேண்டாம் . பிளேடு வைத்து சொரண்டுதல் , ஒயிட் வைத்தல் , ரப்பர் வைத்து அழித்தல் கூடாது . அப்படியே விட்டு விடுங்கள்..

# கூற்று & காரணம் கேள்விகளில் , கூற்று & காரணம் இரண்டும் சரியெனில் அவை சரியான காரணமாகவே அமையும் .

# என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை உள்வாங்கி விடையளிக்க வேண்டும் .
உதாரணத்திற்கு :

திராவிட சிசு என அழைக்கப்படுபவர்? திருஞான சம்பந்தர்.

திருஞான சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தவர் ?
ஆதி சங்கரர்.

திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர்?
பரிதிமாற் கலைஞர்.

பரிதிமாற் கலைஞரை திராவிட சாஸ்திரி என அழைத்தவர்?
வை. தாமோதரன்

இது போன்ற கேள்விகளில் அவசரப்பட்டு மாற்றி விடையளிக்க நேரலாம் . கவனம் தேவை .

# பெரும்பாலும் முதலில் நாம் தேர்வு செய்த விடை சரியானதாகவே இருக்கும் . குழப்பம் இல்லாமல் விடையளிக்கவும் .

மொத்தத்தில் தேர்வின்போது கவனமும் , சிந்தனையும் ஒருங்கிணைத்து படித்தவற்றை நினைவு கூர்ந்து விடையளித்து வெற்றி பெற வாழ்த்துகள்...

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One