மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறை அடிமைப்படுத்தும் கல்விமுறை என்று ஒப்புக்கொண்டு பல நாடுகள் இந்தக் கல்வி முறையை ஒழித்து, மாணவர்கள் கற்கும் விதத்தை மிக நேர்த்தியாகவும், எளிமையாக ஏற்றுக்கொள்ளும் ரீதியிலும் மாற்றி அமைத்துள்ளன.
மனப்பாட முறை கிடையாது:
தற்போது உலகின் தலை சிறந்த கல்வியை வழங்கும் நாடாக பின்லாந்து திகழ்ந்து வருகிறது அந்நாட்டின் கல்விமுறையை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகிறது. முக்கியமாக நம் நாட்டில் பின்பற்றும் மனப்பாட முறை கிடையாது. ஒரு குழந்தை தன்னுடைய ஏழு வயதில் தான் பள்ளியில் சேருகிறது. பரிட்சை கிடையாது. தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் வீட்டுப்பாடம் என்பது கொஞ்சம் கூட கிடையாது.
மேலும் மாணவர்கள் அறிவாளிகள் என்றும் திறமை குறைந்தவர்கள் என்றும் தகுதி கிடையாது அனைவருக்கும் ஒரே கல்வி முறை பின்பற்றப்படுகிறது.
பின்லாந்தில் தமிழக மாணவர்கள்:
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கல்வியில் சிறந்த மாணவர்களை வெளிநாடு செல்வதற்கு தேர்வு செய்து அவர்களை பின்லாந்து ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அனுப்பிவைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் மூலம் தமிழக அளவில் முதற்கட்டமாக 50 மாணவர்களை தேர்வு செய்து பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது தமிழக கல்வித்துறை அதன் விளைவு மாணவர்களிடையே கல்வி சார்ந்த புரிதல்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததாக சென்று வந்த மாணவர்கள் மிக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
பின்லாந்தில் தமிழக அமைச்சர்:
இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 7 நாட்கள் இந்த பயணத்தை திட்டமிட்டுள்ள அமைச்சர் இந்த பயணத்தின் போது பின்லாந்து நாட்டின் கல்விமுறையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை கேட்டிருக்கிறார்.
மேலும் பின்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கரேலியாவில் உள்ள உலக புகழ் பெற்ற ரிவெரியா கல்வி நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில் சார்ந்த கல்வி பயிற்சிகளை நேரில் பார்வையிட்டு அதை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
பின்லாந்தின் கல்வி தமிழகத்தில்:
தொடர்ச்சியாக மேலும் அந்நாடுகளின் கல்வித்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை பார்வையிடும் தமிழக கல்வித்துறை அமைச்சர் அதன் முக்கிய திட்டங்களை தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அப்படி பின்லாந்தின் கல்விமுறை தமிழகத்தில் ஓரளவாவது அமல்படுத்தும் பட்சத்தில் மாணவர்கள் கல்விமுறையை சுமையாக பார்க்காமல் தங்கள் முன்னேற்றத்திற்கான வழியாக ஒவ்வொரு மாணவனும் பார்க்க தொடங்குவான் என்பது மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Ethu eillam vest 2013 Try pass posting potasoluga
ReplyDelete