அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் மானியத்தொகை ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மானியம் வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படும் மானியத் தொகை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட வேண் டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லாத 46 தொடக்கப் பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட உள்ளதால் அப்பள்ளிகளுக்கு மானியம் வழங்க தேவையில்லை.
இந்த மானியத் தொகையில் 10 சதவீதத்தை சுகாதாரம், குடிநீர், தூய்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளி களில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்ற பயன்படுத்த வேண்டும். கட்டிடங் களின் கட்டமைப்பு வசதியினை பழுதுபார்த்து பராமரிக்கவும், தூய்மை இந்தியாதிட்டத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த வேண்டும். பள்ளியின் தேவை உணர்ந்து, விதிகளை பின்பற்றி தரமான பொருட்களை வாங்க வேண்டும். பள்ளியின் தேவைக்கு தவிர வேறு எந்த செலவுக்கும் மானியத்தை பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment