எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு

Friday, September 20, 2019




கருணை மனு குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2012 ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு 16 ஆயிரத்துது 549 பகுதிநேர ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிந்துவந்த 19 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களின் பணியிடங்களை நிரந்தரம் செய்து பணிநிரந்தரம் செய்து அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்நேரத்தில் இவர்களைப்போலவே 9 கல்விஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட ஏதுவாக தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி அவரவர் பாடங்களில் சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக அனைத்துவித ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தேர்வாணையம் போட்டித்தேர்வு நடத்தி தேர்வு செய்துவருகிறது. ஆனால் இதற்கு முன்பு  வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டனர். TRB மூலம் போட்டித்தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட உடற்கல்வி ஓவியம் இசை தையல் கணினிஅறிவியல் பாடத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்விஇயக்க அரசாணை 177ன்படி வழங்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றம் அறிவுரைகளின்படி பாடவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால்  வேலைவாய்ப்பக பதிவுமூப்பு இனசுழற்சி சான்றிதழ் சரிபார்ப்பு எழுத்துத்தேர்வு மூலம் உரியக்கல்வித் தகுதியோடு  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே இப்பாட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் குடும்பநலன் கருதி மனிதநேயத்துடன் பணிநிரந்தரம் செய்தபின்னரே இப்போது ஆசிரியர் தேர்வாணையம் தேர்வு நடத்திய 1325 உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் 814 கணினி அறிவியல்  பணியிடங்களுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ளவேண்டும் என இக்கருணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பினும் பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் ழுழுமையாக தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வரும் எங்களில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி அரசு தரவேண்டும். இந்த இழப்பினை ஓரளவு போக்க எங்களுக்கு தற்போது தரப்படும் சம்பளத்தில் இன்சூரன்ஸ் தொகை பிடித்து இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு தர வேண்டும். விபத்து, உடல்நலக்கோளாறு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ விடுப்பு உடனடியாக அனுமதிக்க வேண்டும். 2017ம் ஆண்டு சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்தபடி பணிநிரந்தரம் செய்யக்கமிட்டி அமைத்து பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முதல்வர் மனிதநேயத்துடன் உதவிட வேண்டும் என்றார்.


1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One