பாசில் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
பாசில் பூமியின் வாழ்க்கை வரலாற்றுக்கு தொடர்புடையது . பரிணாம வளர்ச்சியின் செயல்முறை மற்றும் குறிப்பிட்ட இனங்கள் உருவாகியுள்ள விதம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள (பாசில்) புதைபடிவ பதிவுகளை பாலியான்டாலஜிஸ்டுகள் ஆராய்கின்றனர் .
ஒரு காலத்தில் வாழும் எந்தவொரு பொருளின் எச்சங்கள், தோற்றம் அல்லது தடயமாகும் . எலும்புகள், குண்டுகள், வெளிப்புற எலும்புக்கூடுகள், விலங்குகள் அல்லது நுண்ணுயிரிகளின் கல், மரம் உள்ளிட்ட எச்சங்களின் படிவங்களை பாசில் என்று அழைக்கப்படுகிறது .
பாலியான்டாலஜி என்பது பாசில் ஆய்வு ஆகும். அவற்றின் வயது, உருவாகும் முறை மற்றும் பரிணாம முக்கியத்துவம். மாதிரிகள் பொதுவாக பல ஆயிர ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அவை பாசிலாக கருதப்படுகின்றன. மேற்கண்ட
பாசில்ஸ் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாசில் சேகரிப்பாளர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில்
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் செயலாளர் கணக்குத் தணிக்கையாளர் ராய் ஜான் தாமஸ், மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக நிர்வாக அறங்காவலர் முத்துச்செல்வி, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிடன் தலைவர் அருமை ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் , பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மணிவண்ணன், லில்லி ஜெயராணி ,
பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி, இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா
உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
No comments:
Post a Comment