தீபாவளி திருநாளை முன்னிட்டு எலைட் சிறப்பு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை செய்து அசத்தினார்கள்.
வாழ்த்து அட்டை என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் அட்டை ஆகும்.வாழ்த்து அட்டை பண்டிகைத் திருநாள், பிறந்தநாள் உட்பட முக்கியமான நிகழ்விற்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. தற்போது வாழ்த்து அட்டை அனுப்புவது குறைந்து வரும் காலத்தில் சிறப்பு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் பெற்றோர்களுக்கு ஹேப்பி தீபாவளி என ஆங்கிலத்தில் எழுதி பட்டாசுகளை வண்ணங்களால் வரைந்து உள்ளார்கள். பின்பக்கம் பெறுநர் விலாசத்திற்கான இடமும் அனுப்புனர்க்கான இடமும் உள்ளது.
பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தயார் செய்த வாழ்த்து அட்டைகளை ஒவ்வொரு மாணவரும் தனது பெற்றோர்களிடம் கொடுக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றாகள்.
No comments:
Post a Comment