திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு துவக்கப்பள்ளியில் அன்றாட செய்தித்தாள்களை படிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செய்தித்தாள் வாசிப்பது என்பது சமூக நிகழ்வுகளைப் பற்றி அச்சிடப்பட்ட தகவல்களை
படிப்பதாகும்.
செய்தித்தாள்கள் கல்வி, கலை, கலாச்சாரம், அரசியல், வரலாறு, வணிகம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கி வருவதாகும். மாணவர்கள் அன்றாட செய்திகளை அறிந்து கொள்ள நாளிதழ்களை வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி பேசினார். இந்து தமிழ் திசை நாளிதழ்களில் இருந்து வெற்றிக்கொடி அறிவால் உயர்வோம் மாணவர்களுக்கு வழங்கினார்கள் மாணவர்கள் வெற்றிக்கொடி பிரதியில் உள்ள செய்திகளை படித்து பரவசம் அடைந்தார்கள் நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் புஷ்பலதா செய்திருந்தார்.
No comments:
Post a Comment