எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒருமுறை பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

Friday, October 25, 2019


பிளாஸ்டிக் இல்லாத உலகம் உருவாக்குவோம், எதிர்கால சந்ததியருக்கு சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவோம்
ஒருமுறை பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை தவிர்ப்பது தொடர்பாக, ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்களை சேகரித்தனர். வரும் காலங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், கொண்டு வரவும் வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது.
பின், 'ஒருமுறை பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்; வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இவற்றின் பயன்பாட்டை தவிர்ப்போம்
பிளாஸ்டிக் இல்லாத உலகம் உருவாக்க ஒத்துழைப்போம்; எதிர்கால சந்ததியருக்கு நல்ல சுற்றுச்சுழலை உருவாக்குவோம்' என, உறுதிமொழி ஏற்றனர்
மக்கும் குப்பை மக்காத குப்பையினை பிரித்து குப்பை தொட்டிகளில் போட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ் தலைமை வகித்து பேசினார்
 அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவன நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் , பள்ளி ஆசிரியர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One