பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க திருச்சி ஆல் செயின்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ் முன்னிலை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், எரிவாயு குடோன் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமான பருத்தி ஆடைகள், பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும். பெரியோர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பசுமை பட்டாசுகளை வைத்து வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றி கொண்டால் உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீ விபத்தின் போது மாவட்ட தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அவசரகால உதவி எண் 101 தொடர்பு கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றார்கள்.
No comments:
Post a Comment