எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பணி மாறுதலில் செல்லும் ஆசிரியரை போகவிடாமல் தடுத்து கண்ணீர் விட்ட மாணவ - மாணவிகள். நெகிழ்ச்சி சம்பவம் !!

Wednesday, November 20, 2019


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , கணித ஆசிரியராக பணியாற்றியவர் செந்தில்குமார். தொடர்ந்து 23 ஆண்டுகளாக இங்கு அவர் பணியாற்றி வந்தார்.

தற்போது, அவர் பதவி உயர்வில், முதுகலை ஆசிரியராக, தொண்டாமுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, பணியிட மாறுதலில் செல்கிறார். இதையடுத்து ஆசிரியர் செந்தில்குமாருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

அப்போது, மாணவ - மாணவியர், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு, 'சார் போகாதீங்க; இந்த ஸ்கூல விட்டு போகாதீங்க' என, கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதைப் பார்த்து, ஆசிரியர்களும் கண் கலங்கினர். பிரிவு உபசார விழாவில், பிரிய மனமின்றி ஆசிரியர் செந்தில்குமார் விடைபெற்றார்.

பொதுவாக ஆசிரியர் செந்தில் குமார், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோர், மாணவர்களை அழைத்து, கவுன்சிலிங் செய்து, படிக்க வைப்பார். பாடங்களை புரியும் வகையில் நடத்திவார்.

இதனால், ஆசிரியர், மாணவர்கள் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றால், அந்த ஆசிரியரின் பாடங்களையும் சேர்த்து ஆசிரியர் செந்தில்குமார் நடத்துவார் என்று அப்பள்ளி மாணவர்கள் அவர் குறித்து சிலாகித்து பேசினர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One