எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

Sunday, November 10, 2019




நேற்று வெளியிடப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான  தேதிகள் ஒதுக்கப்படவில்லை


இது குறித்து பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்களிடம் இருந்து மாநில தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து,

உடனடியாக,
 _பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்
 ஆகியோரை மாநிலத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலி  பணியிடங்களில் எந்தெந்த பணியிடங்கள் உபரிப்பணியிடங்கள் என இணைய வழி கலந்தாய்வில் கண்டறிவது கடினமாகும்


ஆகையால் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும்

காலி பணியிடங்களை ஆய்விற்கு உட்படுத்தி உபரிப்பணியிடங்களை நீக்கி காலிப்பணியிடங்களை வரைவு செய்து காலிப்பணியிடங்களுக்கு விரைவில் பிறிதொரு நாள் கலந்தாய்வு நடத்தப்படும்* என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

1 comment

  1. நடை பெறுமா? உறுதியாக தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One