எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?

Monday, December 30, 2019




உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல், இம்மாதம், 27ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.இதனால், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, 3ம் தேதி திறக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இருப்பினும், 'உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, பல பள்ளிகளில், 3ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் பலரும், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை பாதிக்காத வகையில், பள்ளிகள் திறப்பை, வரும், 6ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One