கற்றதை அளித்து கல்லாததை பெறுவீர்
திறந்தவெளி நூலகத்திற்கு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க சேகரிப்புக்கலை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்த வெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நூலகத்துக்கு கதவுகள் கிடையாது. புத்தகங்கள் நனையாமல், சேதம் அடையாமல் இருப்பதற்காக கூரை அமைக்கப்பட்டு புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் இருக்கும். பொதுமக்கள் இங்கு வந்து இலவசமாக புத்தகங்களை எடுத்து சென்று படித்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களிடம் உள்ள உபயோகம் இல்லாத புத்தகங்களை இங்கு வைத்துவிட்டு செல்லலாம். 24 x 7 மணி நேரமும் இந் நூலகம் திறந்து இருக்கும். மாநகராட்சி ஊழியர் ஒருவர் மட்டும் பணியில் இருப்பார்.
இந் நூலகம் ‘’லிட்டில் பிரீ லைப்ரரி’’ என ஆங்கிலத்தில் பெயர். வெளிநாடுகளில் இதுபோன்ற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன் முதலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் தான் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
பொதுமக்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களை இங்கு வைத்து விட்டு செல்லலாம்.
இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகத்திற்கு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சேகரிப்புகலை குறித்து வெளியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை சங்கத் தலைவர் விஜயகுமார் அன்பளிப்பாக வழங்கினார்.
நூலகத்தில் பொதுமக்கள் அனைவரும் கற்றதை அளித்து கல்லாததை பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment