எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பஞ்சப்பட்டி அரசுப் பள்ளியில் வளைய சூரிய கிரகணம் விழிப்புணர்வு நிகழ்வு.....

Tuesday, December 10, 2019


*கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் , பஞ்சப்பட்டி ,அரசு மேல்நிலைப் பள்ளியில் 09. 12. 2019 அன்று வானில் ஒரு நெருப்பு வளையம் - வளைய வடிவ சூரிய கிரகணம் அறிவியல் விழிப்புணர்வு செயல் திட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*

*பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.க.ஜெய்பீம்ராணி , எம். ஏ., பி.எட் .,எம் ஃபில் அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்தார்கள்.*

 தொடர்ந்து *முதுகலை இயற்பியல் ஆசிரியர் திரு .பெ .தனபால் , டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 11.30 வரை  வானில் தோன்றும் வளைய வடிவ சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் மாணவர்களும், பொதுமக்களும் எவ்வாறு காணலாம் என செயல்விளக்கம் அளித்தார்.*

மேலும் *பந்து ஆடி, நுண் துளை கேமிரா, பேப்பர் துளை, இருள் அட்டை பெட்டி , தென்னை ஓலை, சூரிய புரொஜெக்டர் பெட்டி, மர நிழல், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் பாதுகாப்பான முறையில் காண்பதற்கான எளிய கருவிகளை எவ்வாறு வடிவமைப்பது பற்றி விளக்கப்பட்டது.*





* *வெறும் கண்ணால்,சாதாரண கண்ணாடி, x கதிர் படம் மூலம் சூரியனை பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது*

நிகழ்வில் *882 பள்ளி மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள்  பங்குபெற்று* நிகழ்வை சிறப்பித்தனர்.

*டிசம்பர் 26 அன்று வளைய வடிவ சூரிய கிரகணத்தை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் காண்பதற்கான செயல் விளக்கம் அளிக்க அனுமதி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.க.ஜெய்பீம்ராணி அம்மா அவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்கள் ,மாணவர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.*

நன்றியுடன்

வளைய சூரிய கிரகணம் பரப்புரையில்......
கனவு ஆசிரியர்
பெ.தனபால்,
*முதுகலை இயற்பியல் ஆசிரியர்,*
*அரசு மேல்நிலைப் பள்ளி,*
*பஞ்சப்பட்டி,*
கரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One