எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

Sunday, December 8, 2019




20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்குநீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,விருப்ப ஓய்வும், ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியதோடு,ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என தெரிவித்தது.


தொடர்ந்து,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை என குறிப்பிட்ட நீதிமன்றம், ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது.


மேலும், 2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும்,ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One