திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நாணயவியல் சேகரிப்பாளர் அப்துல் அஜூஸ் உலக நாடுகள் நாணயங்களை காட்சிப் படுத்தினார்.
உலக புவியியல் அமைப்புப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா அண்டார்டிகா உள்ளன ஏழு கண்டங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா, சவுதிஅரேபியா, கம்போடியா, இலங்கை, துர்க்மெனிஸ்தான், சிங்கப்பூர், சீனா, ஈரான், மங்கோலியா, மாலத்தீவு, மியான்மர், ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், எகிப்து, எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, ஜிம்பாப்வே, சோமாலியா, தான்சானியா, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, லைபீரியா, சூடான், மொரீசியஸ், லிபியா, எரித்திரியா, கனடா, மெக்சிகோ, கியூபா, துனிசியா, கொலம்பியா, உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டினா, பொலிவியா, வெனிசுலா, ஜமைக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அல்பேனியா, கிரீஸ், டென்மார்க், இத்தாலி, ஸ்வீடன், நார்வே, போர்ச்சுகல், நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், போலந்து, ரஷ்யா, வாடிகன் சிட்டி, ஜெர்மனி, ஸ்பெயின், பிஜி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, காங்கோ, கேமரூன், கானா, கினியா, சூடான், செனகல், துனிசியா, மலாவி, மடகாஸ்கர் ,மாலி, மொசாம்பிக், ருவாண்டா, லிபியா, லைபீரியா, ஆண்டிகுவா, கனடா, கியூபா, டொமினிக்கா, உட்பட 200 நாடுகளின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். முகமது சுபேர், சுவாமிநாதன், பாண்டியன், மன்சூர், சந்திரசேகரன், ராஜேஷ், இளங்கோவன், கமலக்கண்ணன், உள்ளிட்ட நாணயவியல் சேகரிப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக செயலாளர் குணசேகரன் வரவேற்க, அஜூஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment