திருவல்லிக்கேணி வெல்லிங்டன் சீமாட்டி பள்ளி முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இங்குள்ள நூலகத்தை சரிசெய்து தருவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு நிதி நெருக்கடி இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
எந்த மாநிலத்திலும் இலவச மதிவண்டி, மடிக்கணினி வழங்குவது இல்லை என்று கூறிய அவர் நிதிநெருக்கடியால் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி வட்டி காட்டுகிறது என்றார். மேலும் தனது மாத ஊதியதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பள்ளிக்கு வழங்குவதாகக் கூறிய அவர் அதை விளையாட்டு மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment