எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.20

Tuesday, February 18, 2020




திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

விளக்கம்:

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

பழமொழி

All things are  difficult  before they are practiced

 சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

கடமையை உயிராக போற்றும் ஒருவரது கர்மம், துன்பத்தையும் இன்பமாக மாற்றும் வல்லமை உடையது.

          ....சத்ரபதி சிவாஜி

பொது அறிவு

1. சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

 துரோணாச்சாரியா விருது.

2. மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் எது ?

பார்லி மலர்.

English words & meanings

 Spermology – study of seeds. விதைகள் குறித்த அறிவியல் படிப்பு.

Saccharin - a very sweet chemical substance that can be used instead of sugar.
சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மிக இனிப்பான வேதியியற் பொருள் வகை.

ஆரோக்ய வாழ்வு

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

Some important  abbreviations for students

VR - Virtual reality

BW - Body weight

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நன்றி மறவா நண்பர்கள்

குறள் :
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம் :
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

கதை :
ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது.

அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்.

தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான்.

அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான்.

நீதி :
ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.

இன்றைய செய்திகள்

18.02.20

◆வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாகத் தேர்வுகள் நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

◆சர்வதேச தாய்மொழி தினத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

◆பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

◆பருவநிலை மாறுபாட்டால் 2070-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிவைச் சந்திக்கும் என்று தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

◆இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ நிா்வாகம் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

◆அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 8-ஆவது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.

Today's Headlines

🌸 The Zipmar administration has announced that there will be no separate exams.The admission will be conducted only through NEET Examination in the up coming academic year.

 🌸UGC has ordered to celebrate International Mother Tongue Day in colleges and universities in a grand manner

🌸 West Bengal Pollution Control Board has announced the ban of loudspeakers due to public examination

 🌸 Researchers from the National Academy of Sciences have expressed concern that by 2070, one third of the world's flora and fauna will be destroyed by climate change.

 🌸 BCCI organisation allocates Rs 2 crore to Indian Cricket Association

🌸 Goneroo Hampi from India tops the list with 5.5 points at the end of the 8th round of the US Cannes Cup Chess Tournament.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One